கடமை நேரத்தில் கஞ்சாவுடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்று அனுராதபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் 

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை எடுக்காமல் தனது கடமை நேரத்தில் தனது சொந்த ஊரான அனுராதபுரத்துக்கு நேற்று சென்றுள்ளார். 

இந்நிலையில், குறித்த நபர் கடமையில் இல்லாததை அறிந்த சக பொலிஸார் தேடியுள்ளனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பான இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் அனுராதபுரத்தில் இருப்பதை பொலிஸார் அறிந்துள்ளனர். 

அதனடிப்படையில் குறித்த நபரை தேடிச்சென்ற அனுராதபுரம் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். அவர் உடமையில் கஞ்சா வைத்திருந்த போது அதையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.