தலைமன்னார், பியர்  பகுதியில் திடீரொன தீப்பற்றிக்கொண்டதில் பலசரக்குக் கடையொன்று முன்றாக எரிந்து நாசமாகியது.

நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பலசரக்குக் கடை திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை அவதானித்த அயலவர்கள், குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இதையடுத்து கடையின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சுமார் 14 இலட்சம் ரூபா மதிக்கத்தக்க பொருட்கள் குறித்த தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக கடை உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த தீ விபத்து தொடர்பில் தலைமன்னார் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.