குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியின் அக்காவின் மகளை அழைத்து சென்று பதிவுத் திருமணம் செய்த சம்பவம் ஒன்று மருதமுனையில் இடம்பெற்றுள்ளது.

மகள் முறையான க. பொ. த உயர் தரத்தில் முதலாம் வருட மாணவியை மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயது நபர் கடந்த டிசம்பர் மாத நடுப் பகுதியில் வெளியூருக்கு கொண்டு சென்று திருமண பதிவு மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மகளைக் காணவில்லை என்று பெற்றோரும் கணவனை காணவில்லை என்று குறித்த நபரின் மனைவியும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்க கடந்த வாரம் குறித்த நபர் பட்டப்பகலில் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு மனைவியின் அக்காவின் மகளை கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு மாயமாக மறைந்துள்ளார். 

பொலிஸார் தொலைபேசியில் அழைத்ததை அடுத்து தாய், பாதுகாவலர் ஆகியோர் பொலிஸ் நிலையம் சென்றபோதிலும் நீதிமன்றம் மூலமாக ஓப்படைத்தால் மாத்திரமே மகளை பொறுப்பேற்க முடியாது என்று இறுதியாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து குறித்த பெண்ணை கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் இரு நாட்கள் அம்பாறை பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் பாரப்படுத்தி பின்னர் கடந்த புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கினர்.

நீதிமன்றம் மூலமாக தாய், பாதுகாவலர் ஆகியோர் மகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.