போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தல் விடுத்துள்ள நிலையில் அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் பேச்சாளரிடம் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், எல்லா மனித உரிமை மீறல் விவகாரங்களையும் உள்ளடக்கிய கொள்கை ரீதியாக கலந்துரையாடல்கள், இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்படுகின்றது.

எந்தச் சூழ்நிலையிலும் மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.