"பியவர" திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 50 வது முன் பள்ளி அநுராதபுரத்தில் உள்ள சியம்பலாவ சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டது. 

ஹேமாஸ் அவுட்ரீச் நிறுவனத்துடன் இணைந்து வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மூலம் 50 முன் பள்ளிகளை வன்னி பிரதேசத்தில் நிர்மாணிக்கும் இலக்குடன் குறித்த இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல பாகங்களிலும் செயல்படுகின்ற குறித்த ஐம்பது முன் பள்ளிகளும் படையினரால் நிர்மாணிக்கப்பட்டு முகாமைதத்துவம் செய்யப்படுகின்றன. இதற்கேற்ப அதிகளவான முன் பள்ளிகள் வன்னி நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளன. 

ங்கு சுமார் 3500 சிறுவர்கள் தமது ஆரம்ப கல்வியினை பெற்றுக்கொள்வதுடன் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக சுமார் 150 ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.