காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் எந்த ஒரு விமானமும் ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் தரையிறங்கவோ, புறப்பட்டுசெல்லவோ முடியாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ நகர் விமான நிலையத்திற்கு வரவேண்டிய 27 விமானங்களில் 15 விமானங்கள் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

நிலமை சீராகும் பட்சத்தில் பிற விமானங்கள் சேவை தொடங்கும் எனக்கூறப்படுகிறது. எனினும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், இதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை மற்றும் பனிப்பொழிவு  காரணமாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையேயான வீதி போக்குவரத்தும் தடைப்பட்டு காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.