குருணாகலில் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. குறித்த சம்பவம், வெல்லவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாவும், குறித்த நபர் அதிக மதுபோதையிலேயே மேற்படி தற்கொலைக்கு எத்தனித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

மேலும் குறித்த நபர், காலையில் இருந்து கடுமையாக உழைத்த பணத்தில், 7000 ரூபாவில் 6000 ரூபாவுக்கு மது அருந்தியுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

ரயிலில் பாய்ந்த போது கணவன் உயிரிழந்த நிலையில் மனைவியை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளதோடு, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

மேலும், 32 வயதான சுனில் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர், தீவிரமான மதுபோதைக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.