பஸ் வண்டியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஒலுவில் - பாலமுனை எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் வண்டியும் தம்பிலுவிலிருந்து மாளிகைக்காடு பிரதேசத்தினை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி விபத்தில் தம்பிலுவில், இர்ணடாம் பிரிவைச் சேர்ந்த 37 வயதுடைய இராஜலிங்கம் கவீந்திரன் என்பரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இராஜலிங்கம் கவீந்திரன் என்பவர் மீன் வியாபாரம் நிமித்தம் மீன்களைக் கொள்வனவு செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து அதிகாலை 4.30 மணியளவில் வெளியாகி மாளிகைக்காடு நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
இதன்போதே எதிரே வந்த பஸ்ஸுடன் மோதி, இரு வாகனங்களும் விபத்துக்குள்ளானதுடன் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த பஸ் பிரதான வீதியில் இருந்து சுமார் நூறு மீற்றருக்கும் அதிகமான தூரத்த்திலிருந்த வயற் காணிக்குள் முச்சக்கர வண்டியினை இழுத்துச் சென்றுள்ளது.
இவ் விபத்தினால் பஸ்ஸில் பயணித்த பயனிகள் சிறு காயங்களுக்ளுக்குள்ளானதுடன் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM