அமெரிக்காவில் தீ பிடித்து எறிந்துக்கொண்டிருந்த வீட்டில் நாயை காப்பாற்ற சென்ற நபர் பரிதாபகரமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.

சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். நாயின் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியேறினார்.

எனினும் இவர் வளர்த்த  நாய் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போனார். உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை.

அதேவேளை நாயின் உடலும் காணவில்லையென தீயணைப்கு வீரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.