மாகந்துரே மதூஷிற்கும் எனது செய்தியாளருக்கும் தொடர்பில்லை - மங்கள சமரவீர

By Priyatharshan

07 Feb, 2019 | 06:57 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பாதாள குழுவினருக்கும் எனக்கும் எமது செயலாளர்களுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. பாதாள குழுவினரது உதவியினை நாடி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதியமைச்சில்  நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய அரபு  இராச்சியத்தின் தலை நகரில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள குழு தலைவர் மாக்கந்துரே மதூஸிற்கும் எனக்கும் தொடர்பு உள்ளதாகவும், கைதுசெய்யப்பட்டுள்ள 25 பேரில் எமது செயலாளரும் உள்ளடங்குவதாக பொய்யான  வதந்தி சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது முற்றிலும் பொய்யான ஒரு குற்றச்சாட்டாகும். இன்றும் எனது செயலாளர் இந்த  செய்தியாளர் சந்திப்பிற்கு  சமூகமளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் யார் என்றும் அவர்களை எவ்வாறு நாட்டிற்கு மீளக் கொண்டு வர  வேண்டும் என்று தொடர்புப்பட்ட திணைக்களங்கள் முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்விடயத்தில் ஒரு சிலர் பொய்யான வதந்திகளை குறிப்பிட்டு பலரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பாதாள குழுவினருடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம்  ஒருபோதும் கிடையாது. பாதாள குழுக்களுடன் தொடர்புடையவர்களை ஒருபோதும் அருகில் வைத்துக் கொள்ளவும் மாட்டேன். என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33