போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு அளிப்பதற்காக  தேசிய அதிகாரசபையை அமைப்பதறகு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

'போதைப்பொருளற்ற நாடு' என்றத் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு வார செயற்திட்டங்களின் போது ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்து.

இந் நிலையிலேயே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு அளிப்பதற்கான  தேசிய அதிகாரசபை அமைத்தல் மற்றும் விசப் போதைப்பொருட்களை கண்டறிவதற்கான நவீன இயந்திரங்களை கொள்வனவு செய்தல் சம்பந்தமான செயற்திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.