(எம்.மனோசித்ரா)

பழைய தேசிய அரசாங்கத்தை போன்று தற்போது தேசிய அரசாங்கத்தை நாம் அமைக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல் நெருக்கடி நிலைமையின் போது ஏனைய கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மையினை உருவாக்கியிருந்தோம். எனினும் தற்போது தனியாக பெரும்பான்மையை அமைக்கக் கூடிய பலம் எம்மிடம் காணப்படுகின்றது. 

எனினும் முன்னர் காணப்பட்ட சில அமைச்சுக்கள் நீக்கப்பட்டுள்ளமையால் அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தடைபட்டுள்ளதால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.