திருமணம் செய்ய பெண் கிடைக்காத விரக்தியில் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தனது உயரத்தை அதிகரிக்க குடும்பத்தாருக்கு தெரியாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்  சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நிகில் ரெட்டி(24).  தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொருள் பொறியியலாளர் ஆவர். 

5 அடி 7 அங்குலம் உயரமான அவருக்கு தான் குள்ளமாக இருப்பதாக கவலை. இதனால் அவருக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. தான் குள்ளமாக இருப்பதால் தான் பெண் கிடைக்கவில்லை என்று நினைத்த அவர், தனது உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்ய அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். 

இந்நிலையில் மகனை 3 நாட்களாக காணாத நிலையில் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர். பொலிஸார் அவரது கையடக்கத்தொலைபேசி சிக்னலை வைத்து அவர் மருத்துவமனையில் இருப்பதை கண்டுபிடித்தனர். 

அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருந்த மகனைப் பார்த்த பெற்றோர்  மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டனர். 

தங்களுக்கு தெரிவிக்காமல் மருத்துவமனை எப்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கேட்டனர். 

நிகில் ஒரு வயதுவந்தவர், தனது பெற்றோர் ஊரில் இல்லை என்று தெரிவித்தார், மேலும் கடந்த 6 மாதங்களாக அவர் தனியாகத் தான் மருத்துவமனைக்கு வந்து சென்றார் என மருவத்துவமனையிலிருந்து வைத்தியர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.