தெஹியோவிட்ட பகுதியில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களை பாடசாலைக்கு செல்லும்போது வேகமாக பயணித்த பஸ்ஸொன்று மோதித் தள்ளியுள்ளது. 

மாணவர்கள் பாதை ஓரமாக இடது பக்கமாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோதே எதிரே வந்த பஸ் வண்டி போக்குவரத்து சட்டங்களை மீறி வேமாக வந்து மாணவர்கள் மீது மோதியுள்ளது.

இதனால் விபத்துக்குள்ளான மாணவர்கள் கரவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அதில் ஒரு மாணவி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்தை ஏற்படுத்திய சாரதி பஸ்ஸை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ள நிலையில் அவிசாவளை பொலிசார் பஸ் வண்டியை அவிசாவளை நகரில் மடக்கி பிடித்ததுடன் சந்தேக நபரை கைதுசெயது தடுப்பாக்கவில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.