ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் திகதியில் இருந்து பெப்ரவரி 5ஆம் திகதிவரை 2,522 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு உள்ளது என இனங்காணப்பட்டுள்ளனர்.

பன்றிக்காய்ச்சலுக்கு இன்றுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகமாக ஜோத்பூரில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 11, 811 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 2,522 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது என்றும் என அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.