ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தல் நடைபெறவிருந்த வட மாகாணத்துக்கான கிராம சக்தி மக்கள் இயக்க செயற்குழுக் கூட்டமும் கோப்பாயில் நடைபெறவிருந்த கிராம சக்தி மக்கள் இயக்கம் தொடர்பான மக்கள் சந்திப்பும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளதுடன். சந்திப்பு திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.