வெளிநாட்டு பால்மாவால் சபையில் சர்ச்சை

Published By: Vishnu

05 Feb, 2019 | 08:02 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாட்டு பால்மா என்ற பெயரில் பன்றிக்கொழுப்பு,  மரக்கறி எண்ணெய்யை  மற்றும் லக்டோ கலந்த பால்மாவே வருகின்றது என பிரதி அமைச்சர் புத்திக்க பதிரன சபையில் முன்வைத்த கருத்தினை அடுத்து சபையில் கடும் சர்ச்சை எழுந்தது. 

இத்தனை காலமாக பன்றி கொழுப்பையா பிள்ளைகளுக்கு கொடுக்கின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதுடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் ஏற்படும் என ஆளும் தரப்பின் முஸ்லிம் உறுப்பினர் சுட்டிக்காட்டினர். 

எனினும் இது உண்மையென விடயத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில்வாய்மூல விடைக்கான நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய பால் மா உற்பத்தியின் வரியை குறைத்தாவது இந்த தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படுமா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே புத்தக்க பதிரன மேற்கண்டவாறு கூறியதுடன்,  பால் மா விலை அதிகரிப்பு குறித்து பால்மா நிறுவனங்கள் அடிக்கடி கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். பால் மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரியொருவர் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் நாங்கள் இதுவரையில்  பால்மா விலை அதிகரிப்பு குறித்து எந்த  தீர்மானமும் எடுக்கவில்லை. வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு  அடுத்த வாரம் கூடவுள்ளது. இக்குழு  கூடியதும் இந்த விவகாரம் தொடர்பாக ஆழமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43