பருவநிலை மாற்றம் காரணமாக 21 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி  உருகிவிடும் என்று சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, ”தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவினால் உலகளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது இவ்வாறே தொடர்ந்தால்  இமயமலையின் ஒரு பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகி காணாமல் போகும்  நிலை ஏற்படும்.

மேலும் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதால் இமய மலை பிராந்தியத்தை சுற்றி உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் பருவ நிலை மாற்றம் சார்ந்து மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள இருக்கின்றன. இதன்விளைவு மிகத் தீவிரமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த அறிக்கையை அளித்த ஆசிரியர்களில் ஒருவரான பிலிப்பஸ் வெஸ்டர் கூறும்போது, ”பருவ நிலை மாற்றத்தை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் தேவை.  நாம் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்மென அவர் தெரிவித்துள்ளார்.