(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் மின் கட்டணத்தில் எந்தவித அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் மாத்திரமே இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.