இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந் நிலையில் இத் தொடரில் விளையாடவுள்ள 17 பேர் கொண்ட இலங்கை  டெஸ்ட் குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்க‍ை அணியில் நிரோஷன் திக்வெல்ல உப தலைவராகவுள்ளதுடன், லஹிரு திரிமன்ன, குசல் சில்வா, குசல் மெண்டீஸ், குசல் ஜனித் பெரேரா, மலிந்த சிறிவர்தன, தனஞ்சய டிசில்வா, ஒசாத பெர்ணான்டோ, அஞ்சலோ பெரேரா, சுரங்க லக்மால், கசூன் ராஜித, விஷ்வ பெர்ணான்டோ, சமிக்க கருணாரத்ன, மொஹமட் சிராஸ், லக்ஷசான் சந்தகான், லஷித் எம்புலுதெனிய ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.