உலகளாவிய ரீதியான மரணதண்டனை நிறைவேற்றங்களின் அளவு 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த வருடம் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது.

கடந்த வருடம் குறைந்தது 1,634 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை இது அதற்கு முந்திய வருடத்தை விடவும் 50 சதவீதம் அதிகமெனக் குறிப்பிட்டுள்ளது.

அதிகளவு மரணதண்டனைகள ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு 89 சதவீதமான மரணதண்டனை நிறைவேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.