பிரான்ஸ் தலைநகர் பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அக் கட்டிடத்தின் 7 மற்றும் 8 வது தளங்கள் தீப்பற்றி எரிந்த நிலையில் தளங்களில் வசித்தவர்கள் உடனடியாக வெளியேறினர். 

எனினும் தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருகை தந்ததோடு தீயை

தீயை அணைத்த பின்னர் மீட்பு பணி நடைபெற்ற வந்த நிலையில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். சுமார் 30 பேர் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தினசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக  அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.