மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஈடுப்பட்ட ஜெப்ரி அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜெப்ரி அலோசியஸ் கேட்ட அனுமதியை கொழும்பு பிரதான நீதவான் நிதிமன்றில் தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸுக்கு இந்தியா செல்ல கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தியா செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளார்.

வைத்திய பரிசோதனைகளுக்காக இரண்டு மாத காலத்திற்கு இந்தியா செல்வதற்கு ஜெப்ரி அலோசியஸ் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார். அதனடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.