ரஷ்யா தலைநகர் மொஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

மாஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள நிக்கிட்ஸ்கை பவுல்வர்டு என்ற இடத்தில் உள்ள 10 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பொன்றிலேயே இந்த தீவிபத்து நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில்  திடீரென தீப்பிடித்தையடுத்து வேகமாக அனைத்து விடுகளுக்கும் பரவியது.

இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். எனினும் தீ அனைத்து பக்கங்களிலும் பரவ இரு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் வெளியேற முடியாது பரிதாபகரமாக உயிரிழந்தனர். 

தொடர்ந்தும் அவ் விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் மூலம் மேல் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் சிக்கி இருந்த 43 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன்.

அவர்களுள் தீக்காயங்களுக்குள்ளானவர்களை வைத்தியசாலையிலும் அனுமதித்தனர்.