பிரான்ஸ் நாட்டில் இருந்து ஹொங்கொங்கிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின்  வெடிகுண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

மண் சகதியால் மூடப்பட்டிருந்த அந்த 8 சென்ரிமீற்றர் அகலமான கைக்குண்டு மோசனமான நிலையில் இருந்தபோதும் அது அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை.

கிழக்கு சாய்குங் பிராந்தியத்திலுள்ள கல்பீ தொழிற்சாலையில் கடந்த சன்னிக்கிழமை இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அதனை செயலிழக்க செய்துள்ளனர். 

முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த இந்த வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.