மகேந்திரசிங் தோனி விக்கெட் காப்பில் ஈடுபடும்போது கிரீஸை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஐ.சி.சி. ஏனைய கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான தோனி, கிரீஸைவிட்டு வெளியேவந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷமை, கண் இமைக்கும் நேரத்திற்குள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.

இந்த நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், தங்களுக்கு ஏதாவது கிரிக்கெட் அறிவுரை இருந்தால் கொடுங்கள் என ஐ.சி.சி.யின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டார்.

இதற்கு ஐ.சி.சி, ஸ்டெம்பிற்கு பின்னால் தோனி நிற்கும்போது, துடுப்பாட்ட வீரர்கள் யாரும் கிரீஸைவிட்டு காலை எடுக்காதீர்கள் என பதில் அளித்து தோனிக்கு பெருமையை சேர்த்துள்ளது.

ஐ.சி.சி.யின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி தோனி ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.