(எம்.எப்.எம்.பஸீர்)

போதைப் பொருள் தடுப்பு மற்றும் பாதாள உலக குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றம், திட்டமிட்ட குற்றங்கள்  தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லதீப் நாளையுடன் தனது 41 வருட கால பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.  

நாளை 5 ஆம் திகதியுடன் தனது 60 வயதை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் பூர்த்தி செய்யும் நிலையிலேயே அவர் ஓய்வுபெறவுள்ளார்.