(நா.தனுஜா)

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையின் காரணமாக நாட்டிற்கு 21 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். 

எனினும் பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளில் ஏற்பட்ட தாக்கங்களை சீரமைத்து, சாத்தியமான வகையில் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

இலங்கையின் பலமாக இருப்பது அதன் பூகோள அமைவிடமும், மனிதவளமும் ஆகும். எம்முடைய மனிதவளம் இன்னமும் முன்னேற்றமடைய வேண்டிய நிலையில் உள்ளது. பொருளாதார ரீதியில் முன்நோக்கிப் பயணிப்பதற்கு இது இன்றியமையாததாகும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.