ஊடகவியலாளர்களுக்கு ' என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா ' செயற்திட்டத்தின் கீழ் கடனுதவியை வழங்குவதற்கு நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர 50 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருக்கிறார்.

அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக  ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சிப்பட்டறை ஒன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான  நிதியமைச்சரின் இந்த ஏற்பாட்டைப் பாராட்டினார். 

ராஜபக்ச அரசாங்கம் 547 ஊடகவியலாளர்களுக்கும் ஊடகப்பணியாளர்களுக்கும் வாகனக்கொள்வனவுக்காக தலா 1,200,000 ரூபா கடனை வட்டியில்லாமல் அரசவங்கிகளின் ஊடாக வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடன்களுக்கான வட்டியை திறைசேரியே செலுத்தியது.