முன்னாள் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பில்லப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

சிசிலியா கொத்தலாவலவின் உடல் நிலை பற்றிய வைத்திய அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன் போது நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இது தொடர்பான விசாரணகளை மேற்கொள்ள கால அவகாசம் தருமாறு குற்றபுலனாய்வு விசாரணைப்பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்டன் கீ நிறுவன சேமிப்பாளர்களின் 430 மில்லியன் ரூபாவை மோசடி செய்தால் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.