இலங்கையில் 71 ஆவது தேசிய தின வைபவத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று முழுநாள் பிரித் பாராயண வழிப்பாட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இன்று இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 4.15 வரையில் இந்த பிரித் பாராயண நிகழ்வு இடம்பெறும். 

இதனை சிறப்பான முறையில் நடத்துவதற்காக சலக ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் உருவச் சிலைக்கு அன்றைய தினம் மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 

காலை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். தேசிய தின வைபவத்தை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு சகல வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும், வாகனங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு அரச தகவல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.