மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘லாபம்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற படத்தை தயாரித்த ஆறுமுக குமார். அவருக்கு அந்த படம் பெரிய அளவில் லாபத்தை ஈட்டிக் கொடுக்கவில்லை என்பதால் அவருடைய தயாரிப்பில் நடிப்பதற்கு மீண்டும் டீகோல்ஷீட் கொடுத்திருக்கிறார் மக்கள் செல்வன். 

இந்த படத்திற்கு லாபம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஜனநாதன் இயக்குகிறார்.

ஜனநாதன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க விஜய் சேதுபதி தீர்மானித்திருந்தார். ஆனால் பேட்ட படத்தில் நடித்த சுப்பர் ஸ்டார் படங்களை தயாரிக்கவேண்டாம் என்றும், வாய்ப்பளிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார். அதனால் ஜனநாதனின் இயக்கத்தில் படத்தை தயாரிக்காமல், அவருடைய இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் மக்கள் செல்வன்.

தற்போது இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அண்மைக்காலமாக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வந்த ஸ்ருதி ஹாசன், இயக்குநர் ஜனநாதன் சொன்ன கதை பிடித்துவிடவே, உடன் நடிப்பது மக்கள் செல்வன் என்பதால் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த சீதக்காதி படத்தை, நடிகை ஸ்ருதிஹாசன் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.