(நா.தனுஜா)

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சில அரசியல்வாதிகளால் தவறானதொரு அபிப்பிராயம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் புதிய அரசியலமைப்பின் மூலம் மாற்றியமைக்கப்படவோ, திருத்தங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழுள்ள தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயற்பாடுகளுக்கான இணைப்பாளராகவும், அமைச்சின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு பொறுப்பாகவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.