இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலை தடுக்க இலங்கை முன்னெடுத்து வருகிற  முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. 

இலங்கை கடற்படை தளபதியை அவுஸ்திரேலியாவின் ஆட்கடத்தல் குறித்து ஆராயும் ஆணையாளர் சந்தித்த போதே இதனை குறிப்பிட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.