ராஜஸ்தான் மாநிலம் புஷ்கார் நகரில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை உள்­ளூர்­வா­சிகள் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ய முனைந்­த­தோடு அவ­ரது நண்பர் மீது கடும் தாக்­குதல் நடத்­திய சம்­பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்­தி­யாவை சுற்­றிப்­பார்க்­க­ வந்த ஒரு இளம்­வ­யது பெண்ணும் அவ­ரது ஆண் நண்­பரும் ராஜஸ்தான் மாநி­லத்­துக்கு வந்­துள்­ளனர். அஜ்மீர் நகரில் இருந்து சுமார் 15 கிலோ­மீற்றர் தூரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புஷ்கார் நக­ருக்கு ஒரு வாடகை மோட்டார் சைக்­கிளில் சென்­றனர்.

சம்­ப­வத்­தன்று மாலை உள்­ளூரை சேர்ந்த சில சமூ­க­வி­ரோ­திகள் மோட்டார் சைக்­கிளில் சென்ற அந்த ஜோடியை வழி­ம­றித்­தனர். அந்த இளம்­பெண்ணின் கைப்­பையை பறித்­த­துடன், அவ­ரது ஆடை­களை கிழித்து மான­பங்­கப்­ப­டுத்­தினர். இதை தடுக்க முயன்ற அவ­ரது ஆண் நண்­பரை கொலை­வெ­றி­யுடன் கல்லால் தாக்­கி­யுள்­ளனர்.

தனக்கு ஏற்­பட்ட இந்த கொடூர சம்­ப­வத்தால் உண்­டான திகிலில் இருந்து இன்னும் மீளாத அந்தப் பெண் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளிக்­கக்­கூட இய­லாத அளவில் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் காணப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.