(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது அனைவரும் வெட்கப்பட வேண்டிதொரு விடயமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். 

தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு பயந்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தேர்தலை கால தாமதப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மஹந்த தேசப்பிரியவினுடைய அறிவிப்பு சிறந்ததொரு பதிலடி எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாவிட்டால், தான் பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.