ஹட்டன் பிரிவிற்குட்பட்ட பகுதியான ருவன்புற வனப்பகுதி சில விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

இதனால் 75 ஏக்கருக்கும் அதிகமான வனப் பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளதாக ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி ஏ.எல்.எம். பிரேமலால் தெரிவித்தார்

இத் தீயை ஹட்டன் வன பகுதியாளர்கள், பொலிஸார் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்

இவ்வர்கள் சுமார் 06 மணித்தியாளங்கள் போராடியே இத்தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர் மேலும் இதனால் வனப் பகுதிக்கு பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.