இனிப்புக் கலந்த பாக்குப் பக்கெற்றுக்களை விற்பனைக்கு வைத்திருந்த இரு வியாபாரிகளுக்கு எதிராக நீதிவான் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சின்னமடு பகுதியில் உள்ள சில வர்த்த நிலையங்களில் இனிப்பு கலந்த பாக்கு வைக்கெற்றுக்கள் விற்பனை செய்யபபடுவதாக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஜெகதாசன் ஜெயப்பிரதீப் ஆகிய இருவரும் இரு வர்த்தக நிலையங்களையும் சோதனையிட்டனர்.

இதன்போதே அங்கு தடை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இனிப்புக் கலந்த பாக்குப் பைக்கெற்றுக்கள் இருந்தமையை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து பாக்குப் பைக்கெற்றுக்களைக் கைப்பற்றி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஒப்படைத்த சுகாதார பரிசோதகர்கள் இருவருக்கும் எதிராக மன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து நீதிவான் அவர்களுக்கு முறையே ரூபா 4 ஆயிரம் ரூபா 6 ஆயிரம் அபராதம் வித்துள்ளார்.