மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அகமது ஷா

Published By: Vishnu

01 Feb, 2019 | 11:09 AM
image

மலேசியாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா புதிய மன்னராக பதவி ஏற்றார்.

மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளதுடன் அங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னர் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் ஆட்சியை நிர்வகித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மலேசியா மன்னராக கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் 5 ஆம் சுல்தான் முகமது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6 ஆம் திகதி பதவி விலகினார். 

இவர் முன்னாள் ரஷ்ய அழகியை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து, மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா கடந்த வாரம் அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற விழாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மன்னராக பதவி ஏற்றார். 

அமத்துடன் அதே விழாவில் நாட்டின் துணை மன்னராக சுல்தான் நஸ்ரின் ஷா பதவி ஏற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

2026-07-22 16:20:06
news-image

டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினரால்...

2026-07-22 16:33:45
news-image

டெல்லி போராட்டம் : கைது செய்யப்பட்ட...

2026-07-22 11:57:27
news-image

அசாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ; கடந்த...

2026-07-22 11:13:45
news-image

Godzilla vs. Kong திரைப்படப் புகழ்...

2026-07-22 11:02:41
news-image

புதுடெல்லியில் பரபரப்பு: பிரதமர் மோடி இல்லம்...

2026-07-22 09:39:58
news-image

இந்தியாவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து:...

2026-07-21 17:00:50
news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03