குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்காகும் எனத் தெரிவித்த மின் சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கை மின்சார சபையின் தலங்கம நுகர்வோர் சேவைகள் நிலையத்தை பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை மின்சார சபையின் எந்தவொரு பிரிவையும் தனியார்மயப்படுத்தக்கூடிய யோசனைகளை சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.