(இராஜதுரை ஹஷான்)

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை, மற்றும் காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஆகியோரது  விசாரணைகள் அரசாங்கத்தினால் மூடி மறைக்கப்பட்டதாகவே உள்ளது. 

இச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்களே காணப்படுகின்றமையினால் உடனடியாக உண்மை தன்மையினை பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.