(இராஜதுரை ஹஷான்)

2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவைரயிலான காலப்பகுதியில்  இடம்பெற்றுள்ள அரசியல் பழிவாங்கல், முறையற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மற்றும் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட ஆலோசனை  வழங்கும் சேவை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்  ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சட்ட ஆலோசனை  சேவையானது இம் மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு புதன் கிழமையும் பிற்பகல் 01 மணி முதல் 05 மணிவரையில் இலக்கம் 30 ஸ்ரீ மத் மார்கஸ் பெர்னாந்து மாவத்தையில் அமைந்துள்ள  எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறும்