வெளிநாட்டில் தனது கணவர் தொழில் புரிந்து வந்த நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த, சரவணன் - சந்தியா தம்பதியின் மூன்று வயது மகன் விரோசன் வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளான்.

தாதியாகப் பணிபுரியும் சந்தியா ஊசி போட்ட பின்னரே விரோசன் உயிரிழந்ததாக பொதுமக்கள் கூறவே, சந்தியாவையும் அவரது தாயையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் காதல் திருமணம் செய்து கொண்ட சந்தியாவின் கணவர் சரவணன் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில், சக்கரகுப்பத்தைச் சேர்ந்த பிதாமகன் என்பவருடன் சந்தியாவுக்கு தொடர்பு ஏற்பட்டு, நாளடையில், அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக குழந்தைக்கு சந்தியா விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.