உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனே ஆங்கில மருந்தின் பின்னால் ஓடாமல் நம் முன்னோர் பயன்படுத்திய இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் நோய்நொடியின்றி வாழலாம்.
1. திடீரென்று ஏற்படும் நெஞ்சு வலி மற்றும் இருதயப்பகுதியில் உள்ள வாயுப்பிடிப்பு மற்றும் இதய நோய்கள் தீர மணத்தக்காளி கீரையோடு நான்கு பல் பூண்டு மற்றும் நான்கு மேசைக் கரண்டி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வேகவைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.2. கொத்தமல்லி சாறு, பூண்டுப் பல் மற்றும் வெங்காயச் சாற்றினை மூன்றினையும் ஒன்றாக அரைத்து பின் சிறிது தேன் சேர்த்து எடுத்து கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். தினமும் காலை மாலை 50 மில்லி சாப்பிட வேண்டும் இவ்வாறு சாப்பிட்டால் இதயத்தில் ஏற்படும் நோய்கள் குணமாகும்.