பனாமா நாட்டில்  தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்,  விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும்  பதுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் பனாமா ஆவணங்கள் வெளியாகிய உலகில் கொடிக்கட்டி பறந்த பல முக்கிய புள்ளிகளை  உலுக்கிப்போட்டது அதில்  ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டர் டேவிட் மனைவியும் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து  சிக்மண்டர் டேவிட்டை  பதவி விலக கோரி  எதிர்கட்சிகள் போராட்டத்தை அறிவித்தன. 

மேலும், தனது மீதான குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் டேவிட்டை  உடனே பதவி விலக வேண்டும் என ஐஸ்லாந்து முன்னாள் பிரதமர் ஜோகன்னா வலியுறுத்தியதன் பின், ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டர் டேவிட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.