கல்கி அவர்களின் எழுத்தாக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவலை, திருமதி சௌந்தர்யா இணையத் தொடராக தயாரிக்கவிருக்கிறார்.

ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா, தொழிலதிபரும் நடிகருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு மீண்டும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற சரித்திர நாவலை இணையத் தொடராக தயாரிக்கும் பணிகளில், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தொடங்கியிருக்கிறார்.

இந்த இணையத் தொடரை சௌந்தர்யாவிடம் உதவியாளராக பணியாற்றியவரும், வரலாற்று ஆய்வாளருமான எஸ் சூர்யபிரதாப் இயக்கவிருக்கிறார். சௌந்தர்யா ஏற்கனவே கோச்சடையான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் பங்குபற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழிலநுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.