( மாவனெல்லை நீதிமன்றிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் 12 ஆம் சந்தேக நபரிடம் இருந்து குண்டு தயாரிக்கும் படி முறைகள் அடங்கிய முக்கிய ஆவணம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

புத்தளம், வனாத்துவில்லு - லக்டோ ஹவுஸ் தென்னத்தோப்பில்  வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைக் கொன்டு எவ்வாறு இந்த குண்டுகளை தயாரிக்கலாம் எனும் பூரண செயன்முறை அந்த ஆவணத்தில் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு ( சி.ஐ.டி.) இன்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணாவுக்கு அறிவித்தது. 

இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே குற்றப் புலனயவுப் பிரிவின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 2 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க, வன்னாத்துவில்லிஉவில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள், இரசாயணங்களை நீதிமன்றில் ஒப்படைத்து இந்த விடயத்தை தெரிவித்தார்.

அத்துடன் இதன்போது நீதிவான் முன்னிலையில் விசாரணைகளின் நிலைமையை அறிவித்த, கேகாலை மாவட்ட தீர்க்கப்ப்டாத குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன,  இந்த சிலை உடைப்பு விவகாரம் இன , மத வாதத்தை தூண்டி இலங்கையில் மற்றொரு யுத்ததை ஏர்படுத்தும் நடவடிக்கைகளின் ஆரம்பம் என்பது  விசாரணைகளில் தெளிவாவதாக கூறினார்.

விரிவான செய்தி நாளை..