முல்லேரியா அம்பத்தலை பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள (Maxims Holdings) நிறுவனத்தின் புதிய தேயிலை தொழிற்சாலை நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால திறந்து வைக்கப்பட்டது.

இரண்டு பில்லியன் ரூபா முதலீட்டில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தேயிலை தொழிற்சாலை கணனி மயப்படுத்தப்பட்ட நவீன களஞ்சிய தொகுதிகளையும் நவீன அலுவலகக் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. இயந்திரம் மூலமாக தேயிலை தயாரித்தல் மற்றும் பொதியிடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நவீன தொழிநுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் பெற்ற திட்டமான இத்திட்டம் முக்கியமாக தேயிலை ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு உயர்மட்டத்திலான தேயிலை பொதியிடல் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து தொழிற்சாலையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார்.

Maxims Holdings நிறுவனத்தின் தலைவர் ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர் வைத்தியர் சமன் வீரசிங்க உள்ளிட்ட பணிக்குழாமினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.