இலங்கையில் வாராந்தம் புதிய 9 பேருக்கு ஏச்.ஐ.வி தொற்று ஏற்படுவதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இவர்களில் நால்வரையே அடையாளம் காண முடிவதாகவும் ஏனைய ஐவரும் அடையாளம் காண முடியாதவர்களாக குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை 228 பேர் ஏச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 16 ஆண்களும் 61 பெண்களும் அடங்கியுள்ளதாகவும் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.