வெனிசுலா தொடர்பான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா கண்டனம்

Published By: Vishnu

30 Jan, 2019 | 11:22 AM
image

வெனிசுலாவின் எண்ணெய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்த ரஷ்யா, வெனிசுலா ஜனாதிபதி நிகொலஸ் மதுரோவுக்கு ஆதரவாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அமெ­ரிக்­கா­வா­னது வெனி­சுலா அர­சாங்­கத்­துக்குச் சொந்­த­மான எண்ணெய் நிறு­வ­ன­மான பி.டி.வி.எஸ்.ஏ. இற்கு எதி­ராக  தடை­களை விதித்­துள்­ள­துடன்  அமை­தி­யான  அதி­கார மாற்­ற­மொன்றை ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என  வெனி­சுலா இரா­ணு­வத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

வெனி­சுலா ஜனா­தி­பதி நிகொலஸ் மது­ரோவும் அவ­ரது சகாக்­களும்  அந்­நாட்டு மக்­க­ளது சொத்­து­களை  இனி­மேலும்  கொள்­ளை­ய­டிக்க முடி­யாது என  அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜோன் போல்டன் தெரி­வித்­துள்ளார்.

 மது­ரோவை ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்றும் நட­வ­டிக்­கையில் அந்­நாட்டு எதிர்க் ­கட்­சி­யினர் கடந்த சில நாட்­க­ளாக  தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர்.

அமெ­ரிக்­காவும் ஏனைய 20 க்கு மேற்­பட்ட நாடு­களும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரான  ஜுவான் குவாய்­டோவை வெனி­சு­ லாவின் ஜனா­தி­ப­தி­யாக அங்­கீ­க­ரித்­துள்­ளன.

இந்­நி­லையில்  அமெ­ரிக்க திறை­சேரி செய­லாளர் ஸ்டீவன் மனுசின் கூறு­கையில்,  வெனி­சுலா எண்­ணெயைக் கொள்­வ­னவு செய்­வது தற்­போது முதல் நிறுத்­தப்­ப­டு­வ­தா­கவும்  ஆனால்  குவாய்­டோவை ஜனா­தி­ப­தி­யாக அங்­கீ­க­ரிப்­பதன் மூலம் அந்த எண்ணெய் நிறு­வனம் தனக்கு எதி­ரான தடை­களை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் கூறினார்.

 வெனி­சு­லா­வா­னது தனது எண்ணெய் ஏற்­று­மதி தொடர்­பான வரு­மா­னத்­துக்­காக பெரு­ம­ளவில்  அமெ­ரிக்­காவில் தங்­கி­யுள்­ளது. அந்­நாட்டின் எண்ணெய் ஏற்­று­ம­தியில் 41  சத­வீ­த­மான ஏற்­று­மதி  அமெ­ரிக்­கா­வுக்கே மேற்­கொ­ள்ளப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

 இந்­நி­லையில் அமெ­ரிக்­காவால்  தனது  நாட்டு எண்ணெய்க் கம்­ப­னிக்கு  எதி­ராக விதிக்­கப்­பட்ட தடை­களை குற்­றச்­செ­ய­லொன்­றாகக் குறிப்­பிட்­டுள்ள  வெனி­சுலா ஜனா­தி­பதி நிகொலஸ் மதுரோ,  வெனி­சுலா மக்­க­ளுக்கு  உரி­மை­யான எண்ணெய் வளங்­களை அமெ­ரிக்கா திருட முயற்­சிப்­ப­தாக  குற்­றஞ்­சாட்­டினார்.

இது தொடர்பில் அமெ­ரிக்­கா­விலும் ஏனைய  சர்­வ­தேச நீதி­மன்­றங்­க­ளிலும்  அர­சியல் மற்றும் சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க  பி.டி.வி.எஸ்.ஏ. நிறு­வ­னத்தின் தலை­வ­ருக்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்­ள­தாக மதுரோ தொலைக்­காட்­சியில் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்தார்.

இதன்­போது  அமெ­ரிக்­காவும் ஏனைய நாடு­களும் தன்னை ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்றும் நோக்கில்  தனது நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தாரப் போரொன்றை முன்­னெ­டுத்­துள்­ள­தாக  அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

இந் நிலையிலேயே அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52